தன்னை சந்திக்க வரும் ரசிகர்களுக்கு ரஜினி தரப்பில் இருந்து வைக்கப்பட்ட வேண்டுகோள்..!

ஒவ்வொரு ரஜினிரசிகனுக்கும் அவரை எப்போதாவது ஒருமுறையேனும் சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கும்.. ஆனால் கோடிக்கணக்கில் இருக்கும் ரசிகர்களை சந்திப்பது ரஜினியினால் முடிகிற காரியமா..? ஆனால் அதற்கும் ஒரு வழியை உண்டு பண்ணி, கடந்த ஏப்ரல் 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ரசிகர்கள் ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏற்பாடாகியிருந்தது.

ஆனால் அதிலும் நடைமுறை சிக்கல் இருந்ததால் அப்போதைக்கு அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டு மாற்று தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நாளை (மே-15) முதல் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி. தவிர ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் தான் அனுமதி. அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அதனால் வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றும் அன்புடன் மன்றத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Response