“படத்தை பார்த்துட்டு விலை பேசுங்க” ; விநியோகஸ்தர்களுக்கு ரஜினி அறிவுரை..!


கடந்த இரண்டு வருடங்களில் நிறைய விநியோகஸ்தர்கள் தங்கள் வாங்கி வெளியிட்ட படங்கள் நட்டம் அடைந்ததால் தங்களுக்கு நட்ட ஈடு வழங்கவேண்டும் என போராட்டம் நடத்திய நிகழ்வுகள் பல நடந்தன. குறிப்பாக இதில் அதிகம் பாதிப்புக்கு உள்ளானது ரஜினி நடித்த லிங்கா தான். படத்தை வெளியிட்டதில் நட்டம் என பிச்சைஎடுக்கும் போராட்டமெல்லாம் நடத்தினார்கள் சில விநியோகஸ்தர்கள்..

நேற்று நடைபெற்ற விக்ரம் பிரபு நடித்த ‘நெருப்புடா’ பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ரஜினியின் பேச்சில் இதுகுறித்த நேரடியான சாடல் வார்த்தைகள் அறிவுரை சொல்லும் பாணியில் வெளிப்பட்டன. ஒரு பொருளை தயாரிச்சு விற்கிறவன், என் சரக்கு சூப்பரா இருக்குன்னு சொல்லி விற்கத்தான் பார்ப்பான். ஆனா விலைபேசி வாங்குற நீங்கதான், அந்த விலைக்கு இது தாங்குமா, போட்டா போட்ட காச எடுக்க முடியுமான்னு முடிவு பண்ணி வாங்கணும்.. வாங்கின பின்னாடி எனக்கு நட்டம், என் காசை குடுன்னு கேட்கிறது அழகில்லை” என விநியோகஸ்தர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

பாபா’ படம் தோல்வியடைந்த பின் நஷ்டம் அடைந்தவர்களுக்கு உரிய பணத்தை திருப்பிக்கொடுத்து அப்படி ஒரு நடைமுறையை சினிமாவில் ஆரம்பித்து வைத்தவரே ரஜினி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response