சமூக மாற்றத்துக்கு வழிவகுக்கும் ‘தொண்டன்’..!


சமுத்திரக்கனி நடிக்கும் படங்களாகட்டும், அல்லது வரத்து இயக்கத்தில் வெளியாகும் படங்களாகட்டும் அதில் சமூகத்திரில் ஏதாவது ஒரு சிறிய மாற்றம் கொண்டுவரும் விதமான விஷயம் நிச்சயமாக இடம்பெற்றிருக்கும்.. சமூகத்தில் அநீதியை கண்டு போருக்க முடியாமல், அதேசமயம் இயலாமையுடன் வேடிக்கை மட்டும் பார்க்கும் சாமானியனுக்கு சமுத்திரக்கனி ஒரு ஆதர்ச ஹீரோ என்றே சொல்லலாம்.

அந்தவகையில் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் தொண்டன். தலைப்பை பார்த்தும் இது அரசியல் படம் தான் என நினைக்க தோன்றும்.. ஆனால் இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை.. பக்கத்தில் உள்ள மனிதருக்கு ஒரு அநீதி இழைக்கப்படும்போது பார்த்துக்கொண்டு சும்மா இராமல் அவர்களுக்கு உதவ கைகொடுக்கிறானே, அவன் தான் தொண்டன்..

அப்படிப்பட்ட தொண்டனாய் ஒவ்வொருவரும் மாறினால் இந்த சமூகத்தில் என்ன மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்பதைத்தான் ‘தொண்டன்’ படஹ்தில் விரிவாக அலசியிருக்கிறாராம் சமுத்திரக்கனி.. இந்தப்படத்தில் சமுத்திரக்கநியுடன் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன் சுனைனா, அர்த்தனா, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Leave a Response