
நடிகர் சங்கத்தேர்தல் போல தயாரிப்பாளர் சங்க தேர்தலும் வெகு பரபரப்பாகவே நடைபெற்றது. இதில் மொத்தம் மூன்று அணிகள் மோதின. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றார். அவர் 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விஷால் 478 வாக்குகள், ராதாகிருஷ்ணன் 335 வாக்குகள், கேயார் 224 வாக்குகள் பெற்றுள்ளனர்.
விஷால் அணி சார்பாக துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ் வெற்றி பெற்றனர் விஷால் அணி சார்பாக செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா வெற்றி பெற்றார். ஆனால் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் மிஷ்கின் தோல்வியடைந்தார். விஷால் அணி சார்பில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.ஆர். பிரபு வெற்றி பெற்றார்.
தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கலைப்புலி தாணு விஷாலுக்கெதிராக என்னென்னவோ செய்தும் அவரது வெற்றியை தடுக்க முடியாமலேயே போய்விட்டது.
வெற்றிபெற்ற விஷால், “இளைஞர்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். திருட்டு விசிடி, ஆன்லைன் பைரைசி, தமிழ் ராக்கர்ஸ் ஆகியோருக்கு இப்போது சொல்கிறேன். நாங்கள் ஜெயித்து விட்டோம், இப்போது வந்து பாருங்கள். முதல்கட்டமாக விவசாயிகளுக்கும், சில தயாரிப்பாளர்கள் வைத்த கோரிக்கையும் நிறைவேற்ற பாடுவேன்” என கூறியிருக்கிறார்..
பொறுத்திருந்து பார்ப்போம்…


