வங்கிகள் அடிக்கும் கொள்ளையிலிருந்து மக்களைப் பாதுகாக்க ஆரி காட்டிய புதுவழி


மாறுவோம்
மாற்றுவோம்

நாடு முழுவதும் நடக்கும் வங்கிகளின் கட்டணக் கொள்கையை எதிர்த்து “அஞ்சல் துறைக்கு மாறுவோம் வங்கிக்கொள்ளையை மாற்றுவோம்”
திரைப்பட நடிகர் ஆரியின் தலைமையில் மாணவர்களின் விழிப்புணர்வு அறப்போராட்டம் இன்று 15.3.17 மதியம் 2 மணி அளவில் அண்ணா சாலை உள்ள தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது. அப்போது,

சாமானியர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாய் மாறிவிட்டது இந்தியாவில் உள்ள வங்கிகள்.

குறிப்பாக வங்கிக்கணக்கில் குறைந்தபட்சம் ரூபாய்.5000 வைப்புத்தொகை வைத்திறுக்க
வேண்டும், நகரத்தில் இருப்பவர்கள் ரூபா.3000 வைப்புத்தொகை வைத்திறுக்க வேண்டும், அதேசமயம் கிராமத்தில் இருப்பவர்கள் ரூபா.1000 வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக ஏ.டி.எம் மிஷினில் பணம் வைப்பு செய்தாலும் ,எடுத்தாலும் வங்கிக்கணக்கின் இருப்பில் பணம் இல்லாவிட்டாலும் பணத்தை பிடித்தம் செய்வோம் என்று வங்கிகள் அறிவித்துள்ள அதிரடிச் சட்டத்தினால் சாமானிய மக்கள் கலங்கிப் போய் உள்ளார்கள்.

இதற்கு ஒரு தீர்வு வேண்டாமா?
இதை நாம் தீர்க்கவும் வேண்டாமா?
50000 விவசாயக் கடன் வாங்கிய விவசாயியை அடியாட்கள் வைத்து கடன் வசூலிக்கும் வங்கிகள்தான் ரூபாய் .9000 கோடிகளை அள்ளிச்சென்ற மல்லையாவை தப்பிச்செல்ல வழிவகுத்துக்கொடுத்தது.

வங்கிகள் மாதம் ரூபாய் .5000 இருப்பு என்று தவிக்கின்ற சாமானியர்களின் தலையில் இத்தகையை சுமையை சுமத்துவது எந்தவகையில் நியாயம்?

இந்த தார்மீக கேள்வியை நிலைநிறுத்தி ,வெறும் ரூபாய்.50 இல் இந்தியன் அஞ்சல் வங்கியில் கணக்கைத் தொடங்கி ஏ.டி.எம். இல் கட்டணம் ஏதுமின்றி பணம் பெற்றுக்கொள்வதுடன், அபராதம் இன்றி பணப்பரிமாற்றம் செய்யவே இந்த அறப்போராட்டம் நடைபெறுகிறது என்றார் ஆரி.
அஞ்சலக கணக்கில் ஒரு நாளைக்கு ரூபாய்.40000 வரையில் பணத்தினை எடுக்கலாம்.அதேவேளை ஒரு நாளைக்கு ஒரே நேரத்தில் 10 பேர்களுக்கு தலா ஒரு இலட்சம் வீதம் 10 இலட்சம் வரை அனுப்பலாம்.அத்தோடு ஏப்பிரல் மாதம் முதல் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையும் தொடங்கவுள்ளது.

அஞ்சலக கணக்கிலிருக்கும் இத்தனை வசதிகளை இந்தியாவிலிருக்கும் அத்தனை சாமானியர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் திரைப்பட நடிகர் ஆரி உடன் மாணவர்கள் இணைந்து அஞ்சலகத்தில் கணக்கு தொடங்கினார்கள்.

நாளை முதல் இந்தியாவிலுள்ள மக்கள் அனைவரும் அஞ்சல் வங்கிக் கணக்கினை தொடங்குமாறு வலியுறுத்தி ஒட்டு மொத்த சாமானிய மக்களின் நலனுக்காக தமிழர்களாகிய நாம் நடத்தும் அறவழி விழிப்புணர்வு செய்கிறோம் என்றும் தெரிவித்தார்.

Leave a Response