
நடிகர் விஜய், ‘பைரவா’ படத்தையடுத்து தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 61வது படம். இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. அப்பா விஜய், அவருக்கு இரண்டு மகன்கள் என மூன்று வேடத்தில் நடிக்கிறாராம் விஜய். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நித்யாமேனனும், இரு மகன்களுக்கு சமந்தாவும், காஜல் அகர்வாலும் ஜோடியாக நடிக்கிறார்களாம்.
மேலும் படத்தில் சத்யராஜ், கோவை சரளா, எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, சத்யன் உள்பட பலரும் உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள பின்னி மில்லில் போடப்பட்டுள்ள செட்டில் நடந்து வருகிறது., இதில் அப்பாவாக நடிப்பவர் தாடி, மீசையுடன் சிங் கெட்டப்பில் நடிக்கிறார். அவர் தோன்றும் பிளாஷ்பேக் காட்சிகள்தான் தற்போது படமாகி வருகிறது. அதையடுத்து மகன்களாக நடிக்கும் விஜய் தோன்றும் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படுகிறதாம்.


