கத்திசண்டை’ ; இங்கே 420.. ஆந்திராவில் 850..!


இதற்கு முன்பு வரை தான் நடிக்கும் படங்களை தனது சொந்த நிறுவனத்தில் தயாரித்து வந்த விஷால், சொல்லி அடிக்கும் கில்லி மாதிரி தனது படங்களை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்துவந்தார்..

ஆனால் தற்போது இன்னொருவர் தயாரிப்பில் அவர் நடித்துள்ள ‘கத்திச்சண்டை’ படம் ரிலீஸ் தேதி உறுதியாவதில் அவருக்கே தண்ணி காட்டி வருகிறது.

பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்யலாமா என யோசித்துவந்த நிலையில் இப்போது கிறிஸ்துமஸ் ரிலீஸாக வரும் டிச-23ஆம் தேதி வெளியாக இருப்பதாக திடீரென அறிவித்து விட்டார்கள்..

இதே தேதியில் வெளியாக இருந்த சூர்யாவின் ‘சி-3’ சில காரணங்களால் தங்களது ரிலீஸ் தேதிதியை மாற்றிவிட, தனது கத்திச்சண்டைக்கு அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார் விஷால்.

சுராஜ் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ள இந்தப்படத்தில் வடிவேலு, சூரி என இரண்டு பெரும் இணைந்து நடித்திருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது உண்மை.

இந்தப்படத்தை தமிழ்நாட்டில் 420 தியேட்டர்களிலும், ஆந்திரா, தெலுங்கானா இரண்டிலும் சேர்த்து 850 தியேட்டர்களிலும் திரையிட முடிவு செய்திருக்கிறார்களாம். தொடர்ந்து அடுத்ததடுத்த சோகமான நிகழ்வுகளால் சோர்ந்து போயிருக்கும் மக்களை உற்சாகப்படுத்தும் விதமாகவே இந்தப்படத்தை டிச-23ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார்களாம்.

Leave a Response