
சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகி வரும் சூர்யாவின் 35 வது படமான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, சென்னை, உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் பிரபல நடிகை ரம்யாகிருஷ்ணனும் இணைந்துள்ளார். தற்போது காரைக்குடியில் நடந்து வரும் படப்பிடிப்பின் புகைப்படங்கள் வெளியாகி இதனை உறுதிப்படுத்தியுள்ளன. சமீபத்தில் துவங்கிய
இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரொமான்டிக் காமெடி படமாக உருவாகிவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஆர்.ஜே.பாலாஜி, செந்தில், நிரோஷா உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர்.


