
தற்போது விஷ்ணுவை வைத்து ‘மாவீரன் கிட்டு’ என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார் இயக்குனர் சுசீந்திரன்… தற்போது இதன் போஸ்ட் புரடக்சன் வேலைகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. இந்தநிலையில் விக்ராந்தை வைத்து அவர் அடுத்த படம் இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ‘பாண்டியநாடு’ படத்தில் விஷாலின் நண்பனாக கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்து சுசீந்திரனின் குட்புக்கில் இடம்பிடித்திருப்பவர்தான் விக்ராந்த்.. அதுமட்டுமல்ல இவருடன் மாநகரம் பட ஹீரோவான சந்தீப் கிஷனும் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஒரு ஆச்சர்யமான விஷயம் கவனித்தீர்களா..? ராஜபாட்டை படத்தில் இருந்து (ஆதலால் காதல் செய்வீர் படம் தவிர்த்து) அவரது படத்தின் ஹீரோக்கள் பெயர் அனைத்தும் ‘வி’ என்கிற எழுத்திலேயே அமைந்தது ஏதேச்சையான நிகழ்வுதானா என்று தெரியவில்லை. விக்ரம், விஷால், விஷ்ணு இதோ அடுத்ததாக விக்ராந்த் என பட்டியலை பார்த்தாலே அது தெரிகிறதே.


