யாழ்ப்பாணத்தில் பாரதிராஜா

யாழ்ப்பாணத்துக்கு சென்றிருக்கும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு

சனிக்கிழமை (20-12-2014) வரவேற்பு நிகழ்வு யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதரகத்தைச் எஸ்.டி.மூர்த்தி, இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை (21.12.2014) மரியாதை நிமித்தமாக வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் அவர்களை

அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பில் வடக்கு முதல்வருடன் வடமாகாண விவசாய

அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் கலந்து கொண்டிருந்தார்.

அடுத்து அவர் நடிக்கவிருக்கும் ஓம் படத்தைத் தயாரிக்கப்போகும் ஈழத்தமிழர்கள் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ளதாகத் தெரிகிறது.

Leave a Response