
‘காக்கா முட்டை’ என்கிற சென்சேஷனல் ஹிட் படத்தை கொடுத்து கடந்த வருடம் முழுதும் அந்தப்படத்தை பற்றியே அனைவரையும் பேசவைத்தவர் இயக்குனர் மணிகண்டன்.. அடுத்ததாக அவர் இயக்கிய ‘குற்றமே தண்டனை’ படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது.. தற்போது விஜய்சேதுபதி, ரித்திகா சிங் இருவரையும் வைத்து ‘ஆண்டவன் கட்டளை’ என்கிற படத்தையும் இயக்கி முடித்துவிட்டார் மனிகண்டன.
அதை தொடர்ந்து விவசாயிகளின் வாழ்வாதார போராட்டத்தை மையமாக வைத்து ‘கடைசி விவசாயி’ என்கிற படத்தை இயக்கவுள்ளார் மணிகண்டன். இப்படத்துக்காக 70 வயதான ஒரு முதியவரை நாயகனாக நடிக்க வைக்க இருக்கிறார் மணிகண்டன். இதற்காக புதிய முகம் ஒருவரைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அக்டோபரில் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி, ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் மணிகண்டன்.


