இந்தியாவே கொண்டாடும் வீராங்கனை

பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரத்தில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில்  ஆகஸ்ட் 18 அன்று,  ஜப்பானின் நொஜொமி ஒக்குஹராவை  நேர்  செட்டுகளில் வீழ்த்தி இறுதிசுற்றில் நுழைந்தார் பி.வி சிந்து. இந்தியர் ஒருவர் ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவது இது தான் முதன் முறை.

அந்த கணத்திலிருந்து இந்தியாவெங்கும் விளையாட்டு ஆர்வலர்கள் உற்சாகத்தில் திளைக்கின்றனர்.

இதுவரை இந்தியா சார்பாக நான்கு பெண்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே  வெண்கலம் வென்றார்கள்.  ஆனால் சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றதையடுத்து முதல் பெண்மணியாக தங்கம் அல்லது வெள்ளியை வெல்லும் வாய்ப்பு அமைந்திருக்கிறது . இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின்  தலையெழுத்தை புரட்டிப்போட்டு தங்கம் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் சிந்து.

யார் இந்த சிந்து?

ஐதராபாதைச் சேர்ந்த  பி.வி ரமணாவுக்கும்- பி.விஜயாவுக்கு மகளாக 1995  ஆம் ஆண்டு பிறந்தவர் சிந்து. பெற்றோர் இருவருமே வாலிபால் வீரர்கள். எட்டு வயதில் இருந்து பேட்மிட்டன் விளையாடி வரும் சிந்துவின் சின்சியர் உழைப்புக்கு  இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது.

பி.வி சிந்து இறுதிச்சுற்றில் வெள்ளிப் பதக்கம் வென்றால் ஐந்து கோடி பரிசும், தங்கம் வென்றால் எட்டு கோடி பரிசும் காத்திருக்கிறது. ஆனால் இந்தப் பரிசுகளை தாண்டி மக்களின் பேராதரவு எனும் விலை மதிப்புமிக்க விஷயம் சிந்துவுக்கு இப்போது கிடைத்திருக்கிறது.

இந்தியா போன்றதொரு நாட்டில் இருந்து  ஒரு பெண் ஒலிம்பிக்கில் வெள்ளி அல்லது தங்கம் வெல்லும் போது பல கோடிக்கணக்கான பெண்களுக்கு பெரும் உத்வேகம் கிடைக்கும். சிந்து இனி இந்தியாவின் தங்க மகள்.

Leave a Response