புலிகள் காலத்தில் என் தங்கை தனியாக எங்கும் செல்வாள், இப்போது முடியவில்லை – ஒரு தமிழரின் வாக்குமூலம்

தமிழீழப்பகுதிகளில் மக்கள் கருத்தறியும் நல்லிணக்க செயலணியின் கருத்துக்கேட்புக்கூட்டங்கள் நடைபெற்றுவருகிறது. கிளிநொச்சி மாவட்டத்தி ற்கான மூன்றாவது நாள் அமர்வு, கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நாதன் என்பவர்,

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அமைவாக, மக்களின் காணிகளில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும்,

விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் எனது தங்கையை எந்தப் பகுதிக்கும் அனுப்பக்கூடிய சூழல் காணப்பட்டது. அன்று தொழில்நுட்ப வசதிகள் அற்ற சூழலிலும், வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்பிள்ளை வீடு வந்து சேர்வாள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், தற்போது தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்ற போதிலும், பெண் பிள்ளையை தனியாக அனுப்பமுடியாத நிலை காணப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் காலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களில் அஞ்சலி நிகழ்வுகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன. ஆனால், இன்றைய சூழலில் பல்வேறு உணர்ச்சி பேச்சுக்களால் மாவீரர்களது பெயர்களை வைத்து அரசியல் பேசுகின்றனர். இந்நிலை மாற்றப்படவேண்டும்.

இதேவேளை, நல்லிணக்கத்தினை ஏற்படுத்தவேண்டிய மற்றுமொரு முக்கிய இடமாக பல்கலைக்கழகம் திகழ்கின்றது. பல்கலைக்கழகங்களிலேயே இன்று இனப்பிரச்சினை எழும் அபாயம் காணப்படுகின்றது. குறித்த நிலை மாற்றப்பட்டு நல்லிணக்கத்திற்கான அடித்தளம் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்படவேண்டும்” என்றார்.

கருத்துக்கேட்புக் கூட்டங்களில் தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக மக்கள் கருத்துச் சொல்லி வருவது சிங்கள அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response