ஜூலை 22 ஆம் தேதி கபாலி திரைப்படம் வெளியாகிறது

ரஞ்சித் இயக்கத்தில்  ரஜினி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் எப்போது  வெளியாகும்    என்பதுதான் தற்போது திரைப்பட ரசிகர்களின் பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. இப்படம்   வெளியாகும்     தேதி குறித்து பலரும் பல்வேறு தகவல்களை கூறி வந்தாலும், சம்பந்தப்பட்ட படக்குழுவிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில், ‘கபாலி’ படத்தை மலேசியாவில் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ள மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் ‘கபாலி’ படம் ஜுலை 29-ந் தேதி வெளியாகவுள்ளதாக   சுவரொட்டிகள்  அடித்து ஒட்டியுள்ளது. மலேசியாவில் ஒட்டப்பட்ட  சுவரொட்டி காரணமாக ‘கபாலி’ படம் வெளியாகும் தேதி உறுதிபடுத்தியுள்ளது என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால், இந்தியாவில் இப்படம் எந்தத் தேதியில் வெளியாகும் என இதுவரை தெரியவில்லை. மலேசியாவில் வெளியாகும் தேதியிலேயே இந்தியாவிலும் வெளியிடப்படுமா? மலேசியாவில் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இந்தியாவில் வெளியிடப்படுமா? என்பது குறித்து தெரியவில்லை என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில்  இந்தியில் இந்தப் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இப்படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லியிருக்கிறதாம். இத் தகவலை இந்திப்படங்களின் விமர்சகர் தரன் ஆதர்ஷ் தன்னுடைய டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். எனவே அதே தேதியில் தமிழிலும்  கபாலி  படம்  வெளியாகிவிடும் என்று உறுதியாகச் சொல்லப்படுகிறது.

 

Leave a Response