விஜய் அரசுக்கு ஆதரவு – அண்ணாமலை அறிவிப்பு

தமிழ்நாடு பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை தொடங்​கி​யுள்ள ‘வீ த லீடர்​ஸ்’ இயக்​கத்​தின் முதல் மாநாடு பொள்​ளாச்​சி​யில் நேற்று நடை​பெற்​றது.

அதில்…

போதைக்கு எதி​ரான விழிப்​புணர்வு ஏற்​படுத்த ஆண்​டு​தோறும் ஜூலை மாதம் வெள்ளை பட்டை மாத​மாக கடைபிடிக்​கப்​படும்.

கல்வி நிறு​வனங்​களில் போதைப்​பொருள் எதிர்ப்பு குழுக்​களை உரு​வாக்க வேண்​டும்.

வேலைக்குச் செல்​லும் தொழிலா​ளர்​கள்,இளைஞர்​கள் காலை நேரத்​தில் மது​பானம் அருந்​து​வதைத் தடுக்க
கள்​ளச்​சந்தை மது விற்​பனை,கஞ்சா ஆகிய​வற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்​டும்.அரசு அனு​மதி பெற்ற
எப்​எல் 2 மது​பானக்கூடங்​களில் விதி​மீறலில் ஈடு​படு​பவர்​கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்​டும்.

புதிய எப்​எல் 2 மது​பான கூடத்​துக்கு அனு​மதி வழங்​ககூ​டாது.போதைப்​பொருள் தடுப்புச் சட்​டத்தை வலுப்​படுத்த வேண்​டும் என்பன உள்​ளிட்ட தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

அமைப்​பின் தலைவர் அண்​ணா​மலை பேசி​ய​தாவது….

பொள்​ளாச்சி மண்​ணில் பெரிய எதிர்​பார்ப்​போடும் நம்​பிக்​கையோடும் எல்​லோரும் நின்று கொண்டுள்​ளோம்.இது ஒரு மாவட்​டத்​தில் ஒரு போதை ஒழிப்பு மாநாடுதான்,உங்​கள் நம்​பிக்​கையை பார்க்​கும்போது எல்லாப் பக்​கமிருந்​தும்
வந்​திருக்​கின்​றனர்.இங்கு இருக்​கின்ற தன்​னார்​வலர் ஒரு​வரின் தந்தை தற்​பொழுதுதான் உயி​ரிழந்​தார்.அவர்
குடிப்​பழக்​கத்​திற்கு உள்​ளானவர்.அதை​யும் தாங்​கிக்​கொண்டு போதைக்கு எதி​ராக அந்த தன்​னார்​வலர் இங்கு நின்று கொண்​டுள்​ளார்.போதைக்கு எதி​ராக வலு​வாக உள்​ளோம்.

38 நாளில் 19 இலட்​சம் பேர் உறுப்​பின​ராக சேர்ந்​துள்​ளனர்.தமிழகத்​தில் நல்​ல​வர்​கள் இருக்​கிறார்​கள்,வாய்ப்​புக்​காக காத்​திருக்​கிறார்​கள்.இந்த இயக்​கம் எனது குடும்​பத்​திற்குச் சொந்​த​மானது கிடை​யாது,உங்​களுக்​கானது.இந்த அமைப்பைப் பொறுத்​தவரை நானும் ஒரு தன்​னார்​வலர்தான்.இந்த இயக்​கத்​தின் உறுப்​பினர்​கள் 50 இலட்​சத்தை
எட்​டும்போது நிரந்​தர​மாக ஒரு நல்லசமூகம் உரு​வாகும்.சுற்​றுச்​சூழலைப் பாது​காக்க 50 இலட்​சம் மரக்​கன்​றுகளை நடவுள்​ளோம்.

ஆறு மாதம் இலக்கு வைத்​துள்​ளோம்.செப்​டம்​பர் மாதம் பெண்​கள் பாது​காப்பு குறித்​தும்,அக்​டோபர் மாதம்
குழந்​தைகள் நலன் என ஆறு மாதங்​களில் ஆறு முக்​கிய பிரச்​சினை​களை எடுத்து தீர்வுகாண உள்​ளோம்​.‘வீ த லீடர்’அமைப்​பில் 17 சதவீதம் மகளிர் இருக்​கிறார்​கள்.இன்​னும் அதி​க​மாக வேண்​டும்.2031 இல் ஆட்சி மாற்​றம்
ஏற்​படும்,ஆறு மாதங்​கள் முழு​மை​யாக சமூகப்பணி செய்​வோம்.மக்​கள் நம்​மிடம் வரு​வார்​கள்.

ஒவ்​வொரு ஆண்​டும் ஜூலை மாதம் போதைக்கு எதி​ரான மாத​மாகக் கடைபிடிப்​போம்,புதி​தாக ஆட்​சிக்கு
வந்​தவர்​களுக்கு இடையூறு ஏற்​படுத்​து​வது நமது நோக்​கம் அல்ல,அதற்​கான மாநாடு இது அல்ல.குடும்​பத்​தில்
ஏற்​படும் வன்​முறை,சாலை விபத்து என எல்லா இடத்​தி​லும் பிரச்​சனை​களுக்கு காரண​மாக மது இருக்​கிறது.2026 ஆம் ஆண்டு ஒரு கோடியே 65 இலட்​சம் வாக்​காளர்​கள் வாக்​களித்து ஒரு அரசைத் தேர்ந்​தெடுத்​துள்​ளார்​கள்.அந்த அரசுக்கு மரி​யாதை கொடுக்கவேண்​டும்.

புதியஅரசில் உள்ள அமைச்​சர்​கள் பெரும்​பாலானோர் முதல்முறை​யாக அமைச்​ச​ரானவர்​கள்.அதனால் தடு​மாற்​றம் இருக்​கத்​தான் செய்​யும்,தடு​மாறும் போது தூக்கி விடவேண்​டும் கீழே அழுத்​தக்​கூ​டாது.போதை ஒழிப்பு குறித்து ஒரு ஆண்​டுக்​கான வெள்ளை அறிக்கை கொடுத்​துள்​ளோம்​.​நான் இறு​மாப்​புடன் சொல்​வேன் தேசி​ய​வாதி என்​று ஜாதி மதத்தை வீட்​டில் வைத்து பூட்டிவிட்டுத்தான் வந்​துள்​ளேன்.

கரூர் இனாம் நிலம் விசயத்​தில் தவெகவுக்கு ஆதர​வாக உள்​ளேன் எனச் சொல்​கிறார்​கள்.என்னை இந்து விரோதி என்​கிறார்​கள்.இதே இனாம் நிலத்தை அதில் இருப்​பவர்​களுக்கு வழங்கவேண்​டும் என எச்.ராஜா பேசி​னார், பழனிச்சாமி பேசி​னார்.அவர்​கள் இந்து விரோ​தி​கள் இல்​லை,ஆனால் என்னை இந்துவிரோதி என்​கிறார்​கள் மதம் ஜாதி அடை​யாளத்தை வீட்​டுக்​குள் பூட்டி வைத்துவிட்டுத்தான் வெளியே வந்​துள்​ளேன்.தமிழகத்தை முதன்மை மாநில​மாக மாற்றவேண்​டும் என்​பது இலக்கு.அதை நோக்​கித்​தான் உழைப்பு இருக்​கும்.

‘வீ த லீடர்ஸ்’ அரசி​யல் கட்​சி​யாக மாறப்​போகிறது அதற்​கான சரி​யான நேரம்,தலை​மை,எண்​ணிக்கை வரும். கிராமந்​தோறும் சென்று மக்​களைச் சந்​திக்கவேண்​டும்.தமிழகத்​தில் உள்ள ஒவ்​வொரு தனிநபர் மீதும் 4 இலட்​சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் உள்​ளது.தவெக அரசு இந்த ஆண்டு 85 ஆயிரம் கோடி கடன் வாங்​கும்,அடுத்த ஆண்​டும் அதே​போல் கடன் வாங்​கும்.நாம் ஆட்​சிக்கு வரும்போது அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் உலகத்​தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்​கப்​படும்.

உண்​மை​யான சமூக நீதி,நிலை​யான வளர்ச்​சி,விவ​சா​யத்​தில் எழுச்​சி,பண்​பாட்டு மீட்​சி,அரசி​யல் புரட்சி நமது
இலக்​காக இருக்​கும்​.தமிழகத்​தில்​ 2031 இல்​ ஆட்​சி​யைப் பிடிப்​போம்​.

இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

Leave a Response