கனடாவில் முதல் தமிழ்ப்பெண் நீதிபதி பதவியேற்றார்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கனடாவில் திருமதி தெய்வா மோகன் அவர்கள் நீதிபதியாக பதவி ஏற்கின்றார். இவர் கனடாவில் முதல் தமிழ் நீதிபதி என்ற பெருமைக்கு உரியவர் ஆகின்றார்.

கனடாவில் நீண்டகாலமாக வழக்கறிஞராக பதவி வகித்த திருமதி. தெய்வா மோகன் அவர்கள் ஒன்ராரியோவில் நீதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொள்கின்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

திருமதி. தெய்வா அவர்கள் சாவகச்சேரியினை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் காலஞ்சென்ற அரசியல்வாதியும், தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் ஊர்காவற்றுறை பாராளுமன்ற உறுப்பினரும் கனடாவின் மொன்றியால் மாநகர-ில் நீண்டகாலம் வாழ்ந்து மரணத்தை தழுவியவருமான திரு நவரத்தினம் அவர்களின் புதல்வரான கடந்த வருடம் காலம் சென்ற திரு ஜெகன் மோகன் அவர்களின் துணைவி ஆவார்.

ரொரென்ரோவில் 1985ம் ஆண்டு தமது சட்ட அலுவலகத்தைத் திறந்தவர் திரு ஜெகன்மோகன்- தெய்வா மோகன் தம்பதியினர்

திருமதி தெய்வா ஜெகன் மோகன் தற்போது கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல் தமிழ் பேசும் நீதிபதியாக தெரிவு செய்யப் பட்டுள்ளமை அனைத்து தமிழ் மக்களுக்கும் பெருமையே. வாழ்த்துக்கள் திருமதி தெய்வா மோகன் அவர்களுக்கு அனைத்து தமிழ் மக்கள் சார்பிலும்.-

செந்தமிழினி பிரபாகரன்

Leave a Response