
பிரிந்துகிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பாஜக தவிக்கிறது.ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி என்றால்தான் தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற முடியும் என்பது அக்கட்சியின் கணக்கு.
ஆனால், சசிகலா,ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோருடன் சேர்ந்தால் தான் மீண்டும் பின்னால் போய்விடுவோம் என்பதால் அவர்களுடன் இணைய மறுப்பு தெரிவித்து வருகிறார்.இப்போது இந்தப் பட்டியலில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் சேர்ந்திருக்கிறார்.அவர் பின்னால் இன்னும் நிறையப் பேர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் அதிமுக பெரும் பலவீனமாக இருந்து கொண்டிருக்கிறது.அக்கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்ட ஆளே இல்லை எனும் மிக மோசமான நிலையில் இருக்கிறது.
இந்நிலையில், பாஜகவை சேர்ந்த தமிழிசை செளந்தர்ராஜன் அளித்த ஒரு நேர்காணலில், கூட்டணி இல்லாமல் வெற்றி பெற்றுவிடுவேன் என்று சொல்ல இது ஒன்றும் சினிமா அல்ல. திமுக-வை தூக்கி வீச வேண்டும் என்றால், ஓபிஎஸ், தினகரன், விஜய் என அனைவருமே அதற்கான வியூக அமைப்பில் ஒன்றுசேர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதன் மூலம், எடப்பாடி பழனிச்சாமிக்கு பொருத்தமான தேவையான அறிவுரையை தமிழிசை செளந்தர்ராஜன் கூறியிருக்கிறார்.அதை ஏற்று அவர் செயல்பட்டால்தான் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற முடியும் என்பதை உணரவேண்டும் என்று பலரும் கூறிவருகின்றனர்.
