
ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக கே.ஏ.செங்கோட்டையன் உள்ளார்.
இவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருடன் சென்று தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியதாக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
இதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார் செங்கோட்டையன்.
இந்நிலையில்,தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் குறித்த புகார்கள் மீது விரைந்து விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமைப் பொறுப்பில் உள்ளதாக கூறும் அதிமுகவின் பிரிவு உண்மையில் அக்கட்சி அல்ல. கட்சியின் உண்மை நிலை என்ன என்பதை நிரூபிக்க கால அவகாசம் வேண்டும்’ என தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்த கடிதத்தை செங்கோட்டையன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் மூலம் செங்கோட்டையன் அனுப்பியுள்ளார்.
இதில், எடப்பாடி அணி அதிமுகவே அல்ல என்று செங்கோட்டையன் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளதென அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
செங்கோட்டையன் பின்புலத்தில் தில்லி பாஜக இருக்கிற நிலையில் இவர் இவ்வாறு கடிதம் எழுதியிருப்பது எடப்பாடி இல்லாத அதிமுகவை அமைக்க தில்லி பாஜக முடிவு செய்திருப்பதாகவும் அதன் வெளிப்பாடே செங்கோட்டையனின் இந்தக் கடிதம் என்றும் சொல்லப்படுகிறது.
இதனால், அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது என்கிறார்கள்.


