தமிழ்நாட்டுக்கான நிதியை வட மாநிலங்களுக்கு கொடுத்துவிட்டோம் – நிர்மலா சீதாராமன் ஒப்புதல்

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வருகிறது.

இந் நிலையில் இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.சென்னையில் தனியார் கல்லூரியில் நடந்த ஒன்றிய நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அங்கு அவர் பேசும்போது,

நாங்கள் இவ்ளோ பணம் கொடுக்கிறோம். நீங்க என்ன கொடுக்கிறீர்கள்? என்ற வாதமே தவறு. உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ்நாட்டில் கோவை, சென்னையில் இருப்பவர்கள்தான் வரி கொடுக்கிறார்கள். அரியலூரில் இருப்பவர்களிலும் கோவில்பட்டியில் இருப்பவர்களால் வரிவருவாய் இல்லை என்பதற்காக அவர்களுக்கு எதுவும் செய்யக்கூடாது எனச் சொல்ல முடியுமா?. அதுபோல பாலிசி மத்திய அரசிடம் இல்லை

இவ்வாறு அவர் பேசினார்.

அவருடைய இந்தப் பேச்சின் மூலம், தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிதியை ஒன்றிய அரசு தரவில்லை என்பதை ஒப்புதல் வாக்குமூலமாகக் கொடுத்திருக்கிறார்.

வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு முன்னேறி இருப்பதையும் வடமாநிலங்கள் பின் தங்கி இருப்பதையும் ஒப்புக்கொண்டு தமிழ்நாட்டின் சென்னையையும் அரியலூரையும் எடுத்துக்காட்டாகச் சொல்லிப் பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டிடம் இருந்து எல்லா வரிகளையும் பைசா பாக்கியில்லாமல் வசூலித்துக் கொண்டு அடிப்படைத் தேவையான கல்வி நிதி உட்பட முக்கியமான விசயங்களுக்குக் கூட நிதி தராமல் விட்டுவிட்டார்கள்.அதோடு நமக்குச் சேர வேண்டிய நிதியை வடமாநிலங்களுக்குத் தூக்கிக் கொடுத்துவிட்டு அதை நியாயப்படுத்திப் பேசும் துணிவும் அவருக்கு வந்திருக்கிறது. அதையும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு வந்தே பேசத் துணிகிறார் என்பது காலக்கொடுமை என்கிற விமர்சனம் சமூக வலைதளங்கள் எங்கும் நிறைந்திருக்கிறது.

Leave a Response