தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாம்தமிழர் கட்சி, மக்களிடத்தில் முன் வைக்கும் வாக்குறுதிகள்.
சீமான் ஆளணும் என்பது எனது நோக்கமல்ல. எவர் ஆண்டாலும் இந்த கொள்கை ஆளணும் என்பதே எனது நோக்கம் என்று சொல்லி சீமான் பட்டியலிட்டுள்ள கருத்துகள்….

* மருத்துவம் அனைவருக்கும் இலவசம், ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும்
* அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி
* அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும்
* ஆடுமாடு மேய்த்தல் , விவசாயம் அரசுப்பணி… ஊதியம் குறைந்த பட்சம் 30000
* 4 மணி நேர செய்வழிக்கல்வி .. 4 மணி நேரம் தமிழரின் போர் வீர விளையாட்டுப் பயிற்சி
* மெக்காலே கல்வி முறை ஒழிப்பு
* இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே அனுமதி
* ஒவ்வொரு குடும்பமும் நாட்டு மாடு வளர்க்க ஆணை
* விவசாயம் சார்ந்த மரபு வழித் தொழில்களுக்கு மட்டுமே அனுமதி
* பெருவணிக நிறுவனங்களுக்குத் தடை
* தமிழில் படித்தால் மட்டுமே அரசுப் பணி
* அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும்
*10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும்
*,சாலைகள் இரு பக்கங்களிலும் இயற்கையை பாதுக்கும் மரங்கள் நடப்படும்
* புதியதாக காடுகள் வளர்க்கப்படும்
* 1கோடி பனைமரங்கள் முதற்கட்டமாக நடப்பட்டு பாதுகாக்கப்படும்
* தேசிய விளையாட்டாக சல்லிக்கட்டு அறிவிக்கப்படும்
* கோவில்களில் சமசுகிருதம் படித்தால் தேசத்துரோகம்
* அந்நியர்கள் தொழில் தொடங்கத் தடை
* விவசாய நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசின் மேற்பார்வையில் இருக்கும்
* தூய சுத்திகரிக்கப்பட்ட வேதி பொருள் கலக்காத இலவச குடிநீர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்படும்
* தண்ணீர் விற்கத்தடை
* கோக், பெப்சி போன்றவை கடைகளில் வைத்து விற்கத் தடை
* இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும்
* கிராமங்களில் இருந்து குடிபெயர்வது தடுக்கப்படும்
* நகர் மயமாக்கல் தடுக்கப்படும்
* அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்கசெய்யப்படும்
*அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது
*அணுஉலைகள் முற்றாக மூடப்படும்
* பெண் வதைக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்
* வரதட்சணைக்கு தடை
* பூரண மதுவிலக்கு அமல்
* மீன் பிடித்தொழில் பாதுகாப்பு அமைச்சு அமைத்தல்
* எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கம்
* மீனவர் பாதுகாப்புப் படை
* மேலும் தமிழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் முப்பாட்டன் முருகன் கோவில் அமைக்கப்படும்
* திருக்குறள் தேசியநூல் என்று அறிவிக்கப்படும்…
* அழிந்துபோன தமிழர் கலைகள் அனைத்தும் மீடெடுத்து வளர்க்கப்படும்
* தொழூப்புகுத்தல் (சல்லிக்கட்டு) தேசியத்திருவிழாவாக அறிவித்து ,7 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடப்படும்
*தைப்பூசத்திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படும்
* காவல் துறை பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படும், குறைந்த பட்ச ஊதியமாக ,மாதம் 30000 ருபாய் வழங்கப்படும்
* கையூட்டு வாங்கினால் உடனடுயாக பணி நீக்கம் செய்யப்பட்டு சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்
* கையூட்டு வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும்
* பிற மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்கத் தனி அமைச்சகம்


