
கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தான் போட்டியிடுவதாக அறிவித்தார். மேலும், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திருநங்கை தேவியும், கேரள மாநிலம் தேவிகுளம் சட்டப்பேரவை வேட்பாளராக கனகமணிகண்டனையும் அறிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்திலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாகவும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிக்கான வேட்பாளர் பட்டியலும் இம்மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களோடு இருக்க வேண்டும் என்பதற்காக கடலூர் தொகுதியில் தான் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது…
திமுகவுடன் காங்கிரஸ் கூட்டு வைத்தது எதிர்பார்த்ததுதான். அவர்களுடன் தேமுதிகவும் சென்று விடும். தமிழனுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் என்று கூறி விட்டு இப்போது எப்படி திமுகவால் கூட்டு வைக்க முடிகிறது? ஊழல், லஞ்சத்தை ஒழிக்க தற்போதுள்ள எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியாது என்பதாலும், தமிழருக்காக எத்தனை வாக்குகள் கிடைக்கின்றன என்பதை பார்க்கவுமே தனித்து களம் காண்கிறோம்.
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால் சென்னை கணினி பணிகளுக்கும், மதுரை தமிழ் பண்பாட்டுக்கும், கோவை தொழில்களுக்கும், திருச்சி நிர்வாகத்துக்கும், கன்னியாகுமரி தமிழர்களின் தொல்லியல் தலைநகராகவும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விவசாயிகள் அரசு ஊழியராவர்: கைத்தொழில், விவசாயம், கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுவோர் அரசு ஊழியர்களாக மாற்றப்படுவார்கள். எனவே, அனைத்துத் துறைகளிலும் மாற்றம் ஏற்படுத்த பொதுமக்கள், நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்றார்.


