ஈரோடு கிழக்கில் நாம்தமிழர் கட்சிக்கு இரண்டாமிடம் – மக்கள் கருத்து

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கின்றன.

இத்தேர்தலுக்காக திமுக கூட்டணி சார்பில் ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்கப்படுவதாகஙும் அதிமுக சார்பில் இரண்டாயிரம் ரூபாய் கொடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

மொத்தம் இரண்டு இலட்சத்து எண்பத்தேழாயிரத்துச் சொச்சம் வாக்குகள் உள்ளன.

அவற்றில் சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளாவது பதிவாகவேண்டும் என்று எல்லோரும் உழைக்கிறார்கள்.

அதில் சுமார் ஒன்றே காலிலிருந்து ஒன்றரை இலட்சம் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக திமுக கூட்டணியினர் கடுமையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

2021 தேர்தலில் பெற்ற ஐம்பத்தெட்டாயிரம் வாக்குகளை அப்படியே பெற்றுவிட்டால் கூடப் போதுமென அதிமுகவினர் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பலதரப்பட்ட மக்களிடம் உரையாடியதில் ஓர் உண்மை புலப்படுகிறது.

அது என்னவெனில்? திமுகவை வலிமையாக எதிர்க்கக்கூடிய கட்சியாக அதிமுகவை மக்கள் நினைக்கவில்லை. மாறாக நாம்தமிழர்கட்சிதான் உண்மையான எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறது என மக்கள் நினைக்கிறார்கள்.

அதிமுக தொண்டர்களே நாம்தமிழர்கட்சி மீது பற்றுக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கட்சியாக நாம்தமிழர்கட்சியே உள்ளதென அவர்கள் நினைக்கிறார்கள்.

அதேபோல அதிமுகவை விட ஆபத்தானது நாம்தமிழர்கட்சி என திமுகவினரும் நினைக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்த இடைத்தேர்தலில் திமுகவுக்கு அடுத்து அதிக வாக்குகளைப் பெறுகிற கட்சியாக நாம்தமிழர்கட்சி இருக்குமென கூறப்படுகிறது.

இதனால் பதட்டமடைந்திருக்கும் எடப்பாடி அணியினர் எப்படியாவது இரண்டாமிடத்தைப் பிடித்துவிடப் போராடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இன்னும் ஒரு வாரத்தில் எல்லாம் தெரிந்துவிடும்.

Leave a Response