தமிழில் பேசியதால் பெண்ணிடம் பணம் வாங்க மறுத்த ஆட்டோ ஓட்டுநர்- மும்பையில் நடந்த வியப்பு

சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் சென்னைவாசிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த செய்திகள் பத்திரிகை, டிவி, சமூக வலைதளங்கள் மூலம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மும்பையில் வாழும் தமிழ் பெண்ணுக்கு நடந்த சம்பவம் உருக்கமாக அமைந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஷாலினி கிரிஷ், மும்பையில் நகைக்கடை வைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அவர் ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, சென்னை யில் இருக்கும் உறவினர்களை தொடர்பு கொண்டு தமிழில் பேசி னார். இதைக்கேட்ட மும்பையைச் சேர்ந்த முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர், ‘மேடம் ஆப்கே பெஹசான் வாலே சப் டீக் ஹை?’ (மேடம் உங்களுக்குத் தெரிந்தவர்கள் அனைவரும் நலமுடன் இருக் கிறார்களா?) என்று கேட்டார். ‘ஆமாம்’ என்று சொல்லிவிட்டு பேசிக் கொண்டிருந்தார்.

அவர் இறங்கும் இடம் வந்ததும் உரிய தொகையைக் கொடுத்தபோது, ஆட்டோ ஓட்டுநர் அதை வாங்க மறுத்துள்ளார். நான் ஏழை; என்னால் உங்களுக்கு உதவ முடிந்தது இவ்வளவு தான். அல்லா அவர்களை காப்பாற்றட்டும்’ என்று இந்தியில் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். இந்த சம்பவத்தால், பதில் பேச முடியாமல் ஷாலினி திகைந்து நின்றுள்ளார். இச்சம்பவத்தை தன் முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Leave a Response