மோடியால் 300 கோடி நட்டம் – கண்ணீர் விட்டுக் கதறும் டீலர்கள்

செப்டம்பர் மாத இறுதியிலிருந்து பெட்ரோல் டீசல் விலை நாள் தோறும் உயர்ந்துவந்தது.

இதனால் வரலாறு காணாத விலைக்கு பெட்ரோலும் டீசலும் விற்கப்பட்டன.

இதனால், அல்லலுற்று ஆற்றாது அழுது கொண்டிருந்தனர் மக்கள்.

இந்நிலையில்,
தீபாவளி பண்டிகையையொட்டி, ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக நவம்பர் 3 ஆம் தேதி இரவு அறிவிப்பு வெளியிட்டது.

இதன்படி, பெட்ரோலுக்கான கலால் வரியில் ரூ.5 ம், டீசலுக்கான கலால் வரியில் ரூ.10 ம் ஒன்றிய அரசு குறைத்துள்ளது.

இந்த உத்தரவு நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

அதனால் நவம்பர் 4 அதிகாலையில் இருந்து நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5ம், டீசல் லிட்டருக்கு ரூ.10ம் குறைந்தது.

வரி குறைப்புக்குப்பின் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 5 ரூபாய் 26 காசுகள் குறைந்து 101 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 11 ரூபாய் 16 காசுகள் குறைந்து 91 ரூபாய் 43 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது

இதேபோல எல்லா மாநிலங்களிலும் விலை குறைந்திருக்கிறது.

இதனால், வெகுமக்கள் ஓரளவு நிம்மதி அடைந்திருக்கின்றனர்.

அதே சமயம், பெட்ரோல் டீசல் விற்பனையாளர்கள் கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டிருக்கின்றனர்.

ஏன் தெரியுமா?

ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் முந்தின நாள் விலையில், அதாவது வரி குறைப்புக்கு முந்தைய நாள் வரிகட்டி அதிக விலைக்கு வாங்கிய பெட்ரோல் மற்றும் டீசலை குறைந்த விலைக்கு விற்க வேண்டிதாகிவிட்டது.

ஒன்றிய அரசோடு சேர்த்து கோவா, புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் மாநில அரசுகள் தங்கள் பங்குக்குக் கொஞ்சம் வரி குறைத்து மக்களை மகிழ்ச்சிப்படுத்த முயன்றன.

அங்கெல்லாம் மேலும் அதிக நட்டத்தைச் சந்தித்து அதிகத் துயருக்கு விற்பனையாளர்கள் ஆளாகியுள்ளனர்.

இதனால் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு இலட்சத்துக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளது.

அதாவது அவர்கள் இரண்டு மாத வருமானத்தை ஒரே இரவில் இழந்துவிட்டனர்.

இரவு நேரத்தில் வரி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டு அது உடனே நடைமுறைக்கு வரும் என்று சொல்லிவிட்டதால் இந்த நிலை.

ஓரிரு நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தால் அவர்கள் பழைய விலைக்கு வாங்கிய பொருளைக் குறைந்த விலைக்கு விற்று நட்டமடைய நேர்ந்திருக்காது.

ஓர் அரசாங்கம் ஒரு செயலைச் செய்யும்போது நாலாபுறமும் சிந்தித்துச் செயல்படவேண்டும்.

அப்படிச் செய்யாமல் அதிரடியாக வரி குறைப்பு செய்ததால் ஒன்றியம் முழுக்க பல்லாயிரம் டீலர்கள் இரண்டு மாத வருமானத்தை இழந்துள்ளனர்.

அவற்றைக் கணக்கிட்டால் உத்தேசமாக முன்னூறு கோடிக்கு மேல் வரும் என்கிறார்கள்.இது தமிழ்நாட்டு டீலர்களின் இழப்பு மட்டும்தான். ஒட்டு மொத்த இந்தியாவிலும் கணக்குப் போட்டால் எங்கேயோ போய் நிற்கும்.

மோடி மக்களுக்கு ஒரு நன்மை செய்திருக்கிறார் எனும்போதே ஒட்டுமொத்த டீலர்களையும் தெருவில் விட்டிருக்கிறார்.

அவர்களும் அவர்கள் குடும்பமும் கண்ணீர் விட்டுக் கலங்கி நிற்கின்றனர்.

அவர்களுக்கு இழப்பீடு தந்தாகவேண்டும்.

அப்படி இல்லையென்றால் மோடியால் எல்லா நேரமும் தீமைதான் செய்யமுடியுமென வரலாறு பதிவு செய்யும்.

.

Leave a Response