நடிகர் பூச்சிமுருகனுக்குப் புதிய பதவி

2015 ஆம் ஆண்டு நடிகர் சங்கத்தேர்தலில் விஷால் அணிக்கும் சரத்குமார் அணிக்கும் இடையே கடும்போட்டி நடந்தபோது விஷால் அணியில் இருந்த முக்கிய நபர்களில் ஒருவர் பூச்சிமுருகன். அப்போது நடிகர் சங்கச் செயற்குழு உறுப்பினராகத் தேர்வானார்.

திமுகவிலும் தலைமை நிலையச் செயலாளர் என்கிற பொறுப்பு வகிக்கிறார்.தற்போதும் திமுக சார்பில் பல தரப்பினருக்கும் நலத்திட்ட உதவிகள் செய்துவருகிறார்.

திமுக ஆட்சி ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு, திமுகவினருக்கு அரசாங்கத்தில் பல பதவிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வரிசையில், நடிகர் பூச்சிமுருகனுக்கு வீட்டுவசதி வாரியத் தலைவர் பொறுப்பு கொடுக்க முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று சொல்கிறார்கள்.

Leave a Response