திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

நேற்று ( மார்ச் 6) மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆறு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இன்று (மார்ச் 7) திமுக கூட்டணியில் காங்கிரசுக் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளும் கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Response