வெங்காயம் பெட்ரோல் டீசல் கேஸ் – எல்லாமே விலை உயர்வு மக்கள் அதிர்ச்சி

காலையில் எழுந்ததும் நடுத்தர குடும்பங்கள் அதிர்ச்சி அடைந்து பயப்படும் வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் இருக்கிறது.

இன்றைய அதிர்ச்சிகள்…

சென்னையில் எரிவாயு உருளை விலை ரூ.50 அதிகரித்து ரூ.785-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.91.19-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.84.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோவையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திருச்சியில் ரூ.120, திண்டுக்கல்லில் ரூ.145, கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோலும், டீசல், சமையல் எண்ணெய், வெங்காயம், கேஸ் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Leave a Response