சாத்தான்குளம் கொடூரம் – ரஜினிகாந்த் கோபம்

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வையொட்டி நடக்கும் விசாரணையில் காவல்துறை அதிகாரிகள் நடந்து கொண்ட விதத்துக்கு கடும் கண்டனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் பதிவு செய்துள்ளார்.

ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:-

தந்தையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. சத்தியமா விடக்கூடாது

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சத்தியமா விடவே கூடாது என்று அவர் சொன்னது வேகமாகப் பரவிவருகிறது.

Leave a Response