ஊரடங்கு தொடருகிறது இலவச ரேசன் பொருட்கள் இரத்து – மக்கள் புலம்பல்

கொரோனா ஊரடங்கு காரணமாக, ஏழை மக்கள் ஊரடங்கால் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் களைய, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் அனைத்தும், 2.01 கோடி குடும்பங்களுக்கும் விலையில்லாமல் வழங்க உத்தரவிட்டுள்ளோம் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதுபோலவே மூன்று மாதங்களாக இலவசமாகப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஐந்துகட்ட ஊரடங்குகளைத் தாண்டி ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த ஊரடங்கில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி அவசியம். அன்றாடம் வேலைக்குச் செல்வோர் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு மாவட்டத்துக்குள் இயங்கி வந்த பேருந்து சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.இதனாலும் மக்கள் தொழில்களுக்குக்ச் செய்ய முடியாமல் அவதிப்பட்டுவருகின்றனர்.

ஆனால், இம்மாதம் ரேசன் பொருட்கள் இலவசம் இல்லை என்று சொல்லிவிட்டார்களாம்.பொருட்கள் இலவசமாக வழங்குவார்கள் என்று எதிர்பார்த்து இன்று கடைக்குச் சென்றவர்கள், பொருட்களுக்கு விலை என்றதும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். வேலைக்குச் செல்லவிடாமல் தடுத்துவிட்டார்கள்.எங்களுக்கு மிகக்குறைந்த ஆதாரமாக இருந்த ரேசன் பொருட்களுக்கும் விலை வைத்திருப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது என்று மக்கள் புலம்புகிறார்கள்.

Leave a Response