
கொரொனா பரவலைத் தடுக்க தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்தவும், நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து மற்றும் பொது மக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த, தொற்று நோய்கள் சட்டம் 1892 ல் ஷரத்து 2 ன் படி மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தொடங்கி மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை தீவிரமாக அமல்படுத்த 144 சட்டப்பிரிவின் கீழ் ஆட்சியர், காவல் ஆணையர்களுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது.


