கொரொனா கொள்ளையில் நாடே தவிக்கும் நேரத்தில் இராமர் கோயில் கட்ட பூஜை – மக்கள் அதிர்ச்சி

அயோத்தியில் இராமர் கோயில் கட்டும் முதல் கட்டப் பணிகள் தொடங்கியது. இராமர் சிலை வைக்கப்படும் புதிய இடத்தைதேர்வு செய்து அங்கு பூஜை செய்யப்பட்டது. கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பு சிலையை கூடாரத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றும் பணி தொடங்கும்.

விஸ்வ இந்து பரிஷத் துணைத் தலைவரும், இராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளருமான சம்பத் ராய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இராமர் சிலை புதியவைப்பதற்கான இடத்தின் பிரதிஷ்டை இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. அறக்கட்டளை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ.ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். சிலை மார்ச் 25 ஆம் தேதி புதிய இடத்திற்கு மாற்றப்படும். முறையான அடிக்கல் நாட்டப்பட்ட பின்னர், கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என கூறினார்.

இந்தியாவெங்கும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும் நேரத்திலும் அதுகுறித்து எந்தக்கவலையும் இன்றி கோயில் கட்டுகிறேன் என்று கூட்டம் கூடியதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Response