நடிகவேளின் ராஜபாட்டை – புதுயுகம் தொலைக்காட்சி மற்றும் ராடன் நிறுவனம் இணைந்து பெருமையுடன் வழங்கும், நாடகக் கலைக்கு முதன்முதலாக ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி.

செப்டம்பர் 17 அன்று நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடும் வகையில்அவர் நேசித்த நாடகக்கலையை மைய்யமாக வைத்து தமிழகம் முழுவதும், நாடகப்போட்டி நடத்திசிறந்த 3 அணிகளுக்கு தலா 100000,75000 மற்றும் 50000 ரொக்கம் பரிசளித்தனர்.
பெரிய அளவில் நடந்த இந்த இறுதிபோட்டிக்கு நடிகர்.திரு.பாக்யராஜ் , நடிகை. ஸ்ரீபிரியா,நடிகை.ராதிகா சரத்குமார், மற்றும் திரு.கிரேஸி மோகன் அவர்கள் நடுவராக இருந்து சிறந்தஅணியை தேர்வு செய்தனர்.
பிரம்மாண்டமான மேடையில் அமைந்த இந்நிகழ்ச்சியில் நடிகர்.திரு.சரத்குமார்,நடிகர்.திரு.ராதாரவி, நடிகர்.திரு.ராம்கி, நடிகர்.திரு. நிரோஷா, நடிகர்.திரு.சிவகுமார்,நடிகை.சரோஜா தேவி,நடிகர்.திரு.பார்த்தீபன், நடிகர்.திரு.சிவகார்த்திகேயன்,இயக்குனர்.கே.ஸ்.ரவிகுமார், இயக்குனர்.திரு.விக்ரமன், நடிகை.கீர்த்தி சுரேஷ்,நடிகர்.திரு.ரோபோஷங்கர் மற்றும் எண்ணற்ற சின்னத்திரை பிரபலங்களால் அரங்கமே நிரம்பிவழிந்தது.
இந்நிகழ்ச்சியை பரத் மற்றும் நீலிமா ராணி தொகுத்து வழங்கினர்.


