திருவள்ளுவர் சிலைக்கு அவமதிப்பு – பெரும் பதற்றம்

தஞ்சையில் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை ஒன்று அமைந்து உள்ளது.உலகப் பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு அமைக்கப்பட்ட சிலை மீது சில மர்ம நபர்கள் சாணி வீசியுள்ளனர்.

இதில் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் சாணி வீசப்பட்டு சிலை அவமதிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி அந்தப் பகுதியில் இருப்போர் அளித்த தகவலின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை அவர்கள் தேடி வருகின்றனர்.

பிரதமர் மோடி தாய்லாந்து நாட்டில் மேற்கொண்டு வரும் 3 நாள் சுற்றுப்பயணத்தில், திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதோடு திருவள்ளுவர் படத்துக்குக் காவி வண்ணம் பூசியிருந்தார்.

அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில், திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response