நடிகைகளுடன் செல்ஃபி எங்களுக்குத் தடை – மோடி குறித்து பிரபல பாடகர் விமர்சனம்

கடந்த சில வாரங்களுக்கு முன் மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும்‌ நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த அந்த நிகழ்ச்சியில், இந்தி நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான், கங்கனா ர‌னாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரையுலகப் பிரபலங்கள் பிரதமர் மோடியுடன், தங்களது கைபேசியில் செல்பி எடுத்துக் கொண்டனர்.

பிரதமர் மோடி அழைப்பு விடுத்த இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே அதிக அளவில் கலந்து கொண்டதாக விமர்சனம் எழுந்தது. தென்னிந்தியாவைச் சேர்ந்த கலைத் துறையினர் புறக்கணிக்கப்பட்டதாக சில பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

அதில்,நான் ராமோஜி ராவ்க்கு நன்றியுள்ளவன். ஏனெனில், அக்டோபர் 29 ஆம் தேதி பிரதமர் மோடி நடத்திய விருந்தில் அவரால் நான் கலந்து கொண்டேன். நுழைவாயிலில் உள்ளே சென்ற போது எங்களது செல்போன்களை பாதுகாப்புக்கு இருந்த அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டோம். அதற்காக டோக்கன் கொடுத்தார்கள். ஆனால், அதே நாளில் நிறைய பிரபலங்கள் பிரதமருடன் செல்பி எடுத்துக் கொண்டது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதனால் பெரும்பாலானோர் பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்துவருகின்றனர்.

Leave a Response