மோடி நரகத்திற்குச் செல்ல வேண்டும் – காஷ்மீர் பெண் சாபம்

பாகிஸ்தானை சேர்ந்த பாடகி ரபி பிர்சடா. இவர் தனது வீட்டில் பாம்புகள், முதலை நடுவில் பாம்பு ஒன்றைக் கையில் பிடித்தவாறு அமர்ந்தபடி,

நான் ஒரு காஷ்மீர் பெண். பாம்பு, முதலையுடன் இந்தியாவுக்கு வரத் தயாராக இருக்கிறேன். அவற்றை உங்களுக்குப் பரிசாக அளிக்க உள்ளேன்.

காஷ்மீர் மக்களை நீங்கள் மிகவும் துன்புறுத்துகிறீர்கள். உங்களுக்காக என்ன கொண்டு வரப் போகிறேன் என்று பாருங்கள். என்னுடைய இந்த நண்பர்கள் உங்களுக்கு விருந்து அளிக்கப் போகிறார்கள். சாவதற்குத் தயாராக இருங்கள்.

மோடி நரகத்திற்குச் செல்ல வேண்டும். மோடியைப் போன்று நரகமும் மோசமானது என்று பேசியுள்ளார்.

50 விநாடிகள் ஓடும் காணொலியில், பாம்புகளைக் கையில் பிடித்தபடி பாம்பு, முதலைகளை அறிமுகப்படுத்தி அவர் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.

கடந்த வாரம் வெளியிட்ட இந்த காணொலி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதையடுத்து, அவர் மீது லாகூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Leave a Response