தமிழ்ச் சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அண்ணன் திருமா – சீமான் வாழ்த்து

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு இன்று 58 ஆவது பிறந்த நாள்.இதையொட்டி அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

ஆதித்தமிழ்க் குடியில் மிகவும் எளிய பின்புலத்தில் பிறந்து சாதிய அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகி ஆழ்தளத்திற்குத் தள்ளப்பட்டபோதும் தனது ஒப்பற்ற செயல்திறத்தாலும், மங்காத போராட்ட உணர்வினாலும் தலைவனாக வளர்ந்து உயர்ந்து சாதிய பேதமற்ற சமூக விடுதலைக்காகவும், தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புக்காகவும் அயராது களத்தில் நிற்கிற தமிழ்ச்சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அன்பிற்குரிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளை உரித்தாக்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!

அண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும்! தமிழ்ச்சமூகம் விடுதலையை எட்டட்டும்!

இவ்வாறு அந்த வாழ்த்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response