மாநில உரிமை பறிக்கும் இன்னொரு மசோதா – நிறைவேற்றியது பாஜக

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வரும் மசோதா நேற்று (ஜூலை 22) வாக்கெடுப்புக்காக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. புதிய சட்ட திருத்தத்திற்கு
காங்கிரசு, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

புதிய சட்டத் திருத்தம், தேசிய மற்றும் மாநில தகவல் ஆணையர்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குக் கொடுக்க வழி வகை செய்கிறது.

தேர்தல் ஆணையம் போல தேசிய தகவல் ஆணையமும் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதன் ஆணையர்களின் நியமனத்தையும், சம்பளம் நியமிப்பதையும், பதவிக்காலத்தை நியமிப்பதையும் மத்திய அரசு முடிவு செய்யும் என்பது, அதன் தன்னாட்சி அதிகாரத்தைப் பறிக்கும் செயல். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பின் நடந்த வாக்கெடுப்பில், காங்கிரசு,தி.மு.க ஆகிய கட்சிகள், சட்டத் திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தது. மொத்தம் 79 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர். இருப்பினும் 219 ஆதரவு ஓட்டுக்கள் கிடைத்ததால் இந்த சட்டத் திருத்தம் மக்களவையில் நிறைவேறியது.

Leave a Response