அங்குலம் அங்குலமாக எதிரணியை விரட்டி வெற்றி – திருமா பெருமிதம்

பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றி பெற்றது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. இதில் சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அதன் கட்சித் தலைவர் திருமாவளவனும், அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகரும் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இரு வேட்பாளர்களும் மாறி, மாறி முன்னிலை வகித்தனர். இறுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் 497010 வாக்குகள் பெற்றார்.

கடும் இழுபறிக்கு பிறகு, சுமார் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் கூறியிருப்பதாவது….

5,00,229 வாக்குகளை மக்கள் அளித்திருக்கிறார்கள். இந்த வெற்றி ஒரு மகத்தான வெற்றி, மாபெரும் வெற்றி. எனவே, லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பதை விட அங்குலம் அங்குலமாக எதிர் அணியினரை விரட்டி 3219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response