தி மு க விலிருந்து முல்லைவேந்தன் நீக்கப்பட 2 காரணங்கள்

முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

தருமபுரியைச் சேர்ந்த திமுக நிர்வாகி முல்லைவேந்தன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.

அதற்குக் காரணம்?

தர்மபுரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டாராம் முல்லைவேந்தன். அவருக்கு வாய்ப்பு தரவில்லை என்பதால் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டியிருக்கிறார்.

அதோடு, பாமக கட்சியின் அன்புமணி ராமதாஸை சந்தித்து பேசியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ், தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இந்த காரணங்களால், முல்லை வேந்தன் தற்காலிகமாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

Leave a Response