திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்

2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் தி.மு.க. அமைத்துள்ள கூட்டணியில் காங்கிரசு, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

காங்கிரசுக் கட்சிக்கு 10 (புதுச்சேரி உள்பட) தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் தி.மு.க. 19 தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறது.

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்கிற விவரம் கசிந்துள்ளது.உத்தேசமான அந்தப்பட்டியல்…

தி.மு.க. (19 தொகுதிகள்) – வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, கோவை,பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி.

காங்கிரசு (10 தொகுதிகள்) – புதுச்சேரி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், ஆரணி, மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி.

ம.தி.மு.க. (2 தொகுதிகள்) – திருச்சி, ஈரோடு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2 தொகுதிகள்) – மதுரை, திருப்பூர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2 தொகுதிகள்) – நாகப்பட்டினம், தென்காசி.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2 தொகுதிகள்) – சிதம்பரம், விழுப்புரம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1 தொகுதி) – ராமநாதபுரம்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (1 தொகுதி) – நாமக்கல்

இந்திய ஜனநாயக கட்சி (1 தொகுதி) – கள்ளக்குறிச்சி.

Leave a Response