நோட்டாவால் தோற்ற பாஜக அமைச்சர்கள் – மத்தியபிரதேச சுவாரசியம்

மத்திய பிரதேச சட்டமன்றத்துக்கு நவம்பர் 28 ஆம் நாள் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் காங்கிரசுக்கும், ஆண்ட பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11 ஆம் நாள் வெளியானது.

அந்த மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகள். ஆட்சியமைக்கத் தேவையான இடங்கள் 116.

இவற்றில் காங்கிரஸ் 114 இடங்களையும், பா.ஜனதா 109 தொகுதியையும் கைப்பற்றின. பகுஜன் சமாஜ்-2, சமாஜ்வாடி-1 சுயேட்சை-4 இடங்களில் வெற்றி பெற்றன.

இந்தத் தேர்தல் முடிவுகளில் தெரிந்த சுவாரசியமான செய்தி, மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு நோட்டாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது என்பதுதான்.

22 தொகுதிகளில் பா.ஜனதா குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு நோட்டா முக்கிய பங்கு வகித்தது.

பா.ஜனதா மந்திரிகள் 4 பேர் நோட்டாவால் தோல்வியைத் தழுவினார்கள்.

குவாலியர் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட உள்துறை இணை அமைச்சர் நாராயணன்சிங் குஷ்வா 121 ஓட்டில் தோற்றார். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 1550 வாக்குகள் கிடைத்தன.

தமோ தொகுதியில் நிதியமைச்சர் ஜெயந்த் மல்லையா 799 வாக்கில் தோற்றார். இங்குநோட்டாவுக்கு 1,299 ஓட்டுகள் கிடைத்தன.

ஜபல்பூர் வடக்கு தொகுதியில் சுகாதாரத்துறை இணை அமைச்சர் சரத் ஜெயின் 578 வாக்குகள் வித்தியாத்திலும், (நோட்டா 1,209), புர்கான்பூர் தொகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் 5,120 வாக்குகள் வித்தியாசத்திலும் (நோட்டா 5,700) தோற்றனர்.

Leave a Response