தலைவர் பிரபாகரன் வீட்டை சுத்தம் செய்தவர்கள் சிறைபிடிப்பு

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்தநாள் இன்று தமிழர் வாழும் உலகமெங்கும் கொண்டாடப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் இன்று தலைவர் பிரபாகரனின் சொந்த இடமான வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தின் முன்பாக உள்ள புற்கள் மற்றும் புதர்களை வெட்டி துப்பரவுப் பணியில் நான்கு இளைஞர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தன்ராம்.

அந்த நான்கு இளைஞர்களின் அடையாள அட்டைகளை பறித்த வல்வெட்டித்துறை சிங்களக் காவல்துறையினர், அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளன்ராம்.

இச்சம்பவத்தினை தொடர்ந்து தலைவரின் வீட்டுப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனராம்.

சிங்களக் காவல்துறையின் இந்த அடாவடியால் தமிழ் மக்கள் கொதிப்படைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாகரனின் வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்திற்கு மக்கள் வந்து செல்வதை விரும்பாத சிங்கள அரசாங்கம் அவரது இல்லத்தினை சில வருடங்களுக்கு முன்னர் தகர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Response