வட அமெரிக்காவில் மாவீரர் நாள் – பெ.மணியரசன் பங்கேற்பு

வட அமெரிக்காவில் நடைபெறும் “தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2018” நிகழ்வில் பெ.மணியரசன் பங்கேற்கிறார்.

இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிரீகம் செய்த ஈகியருக்கு நினைவேந்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் “நவம்பர் 27” ஆம் நாள் தமிழீழ தேசிய மாவீரர் நாளாக உலகத் தமிழர்களால் நினைவுகூரப்பட்டு வருகின்றது.

இதனையொட்டி, நாடு கடந்த தமிழீழ அரசு Transnational Government of Tamileelam சார்பில், வட அமெரிக்காவின் நியூயார்க்கில் நாளை (27.11.2018) – மாவீரர் நாள் நிகழ்வு நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. வி. உருத்திரகுமாரன் நினைவுரையாற்றுகிறார்.

வட அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க நேரடிப்படி சரியாக மாலை 6.05 மணிக்கு, ஈகைச்சுடரேற்றம் மற்றும் மாவீரர் வணக்கத்துடன் தொடங்கி நடைபெறும் இந்நிகழ்வு, 80 – 51, 261 – STREET, GLEN OAKS, NEW YORK – 11004 என்ற இடத்தில் நடைபெறுகின்றது.

கூட்டம் குறித்த மேலதிகத் தொடர்புகளுக்கு திரு. அகத்தாய்வன் (+1 646.460.4344) (+1972-983-1943) எண்ணுக்கு அழைக்கவும்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் முகநூல் பக்கமான www.Facebook.com/Tamizhdesiyam பக்கத்தில், இந்நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பாகின்றது.

இந்நிகழ்வில், அமெரிக்க வாழ் தமிழின உணர்வாளர்கள் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response