சர்க்கரை தமிழோடு சர்கார் – விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

இன்று முழுக்க விஜய் நடித்த சர்கார் படம் பற்றியே அதிகப்பேச்சு. தமிழகம் தாண்டி வடிந்தியாவிலும் அது பற்றி பேச்சு.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடத் தொடங்கியது முதலே கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்வது வழக்கமாகி வருகிறது. குறிப்பாக அவர் தமிழர்களைக் கவர இத்தகைய உத்திகளைக் கையாண்டு வருகிறார்.

மும்பை இந்தியன்சுக்கு ஆடும்போது மராத்தியிலெல்லாம் அவர் ட்விட் பதிவிடவில்லை, ஆனால் சிஎஸ்கே என்றவுடன் தமிழில் நிறைய ட்வீட்களை இட்டு தமிழ் நெஞ்சங்களை, தல தோனியின் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார் ஹர்பஜன்.

இந்நிலையில், அவர் தமிழில் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததோடு, இன்று வெளியாகி, தமிழகத்தின் பேச்சாக, மூச்சாக மாறியிருக்கும் விஜய் நடித்த சர்க்கார் படத்தையும் குறிப்பிட்டுள்ளது, விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, அவர் ட்விட்டர் பக்கத்திலேயே விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டு வருகின்றனர்.

ஹர்பஜன் வெளியிட்ட ட்வீட்டில்….

#தீபாவளி திருநாள் வாழ்த்துகள் தமிழ் உறவுகளே.புத்தாடையுடன் புன்னகையும் இனிப்புடன் மகிழ்ச்சியும் பரிமாறும் முன்னே சரவெடியோடு ஆரம்பமாகும் #தீபஒளி ஆனந்தம்.செந்தமிழ் தரணியெங்கும் #விவசாயம் செழிக்கட்டும்,சர்க்கரை தமிழோடு இளைய தளபதி #சர்கார் படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும் #HappyDeepavali

இவ்வாறு தன் ட்வீட்டில் பதிவிட்டு அசத்தியுள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்து அதைப் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Response