ரஜினியின் இன்றைய அறிக்கைக்கு இதுதான் காரணமா?

அண்மையில் ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து சுமார் 200 பேருக்கு மேல் நீக்கப்பட்டனர். அது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், எல்லாம் எனக்குத் தெரிந்துதான் நடக்கிறது என்று அறிக்கைவிட்டார் ரஜினி.

அதன்பின்னும் எதிர்ப்புகள் அடங்கவில்லையாம். இதனால் கட்டமைப்பு கலகலத்துவிடும் எனும் நிலை ஏற்பட்டுவிட்டதாம்.

இதனால் ஒரு கூட்டத்தைக் கூட்டி எல்லோரும் தன் பக்கம் இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டதென்றும் அதற்காகவே இன்றைய கூட்டம் நடந்ததென்றும் சொல்லப்படுகிறது.

இன்றைய கூட்டத்துக்குப் பின் அவர் வெளியிட்ட அறிக்கையில்….

கடந்த 23ம் தேதி என்று சில உண்மைகளை ரசிகர்களுக்குச் சொன்னேன். அந்த உண்மை கசப்பானதாக இருந்தாலும் அதில் உள்ள உண்மைத்தன்மையையும் நியாயத்தையும் புரிந்துகொண்டதற்கு நன்றி.

என்னையும் ரசிகர்களையும் யாராலும் பிரிக்கமுடியாது. உங்களைப் போன்ற ரசிகர்களை அடைந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

நாம் எந்தப் பாதையில் சென்றாலும் அது எப்போது நியாயமான, நேர்மையான பாதையாகத்தான் இருக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டதன் மூலம் அவருடைய கட்டுப்பாட்டில் அவருடைய ரசிகர்கள் இல்லை என்பது மேலும் உறுதிப்படுவதாகச் சொல்கிறார்கள்.

எது சரி? என்பது போகப்போகத் தெரிந்துவிடும்.

Leave a Response