7 தமிழர் விடுதலை தமிழக அரசு முடிவுக்கு மக்கள் பெரும் வரவேற்பு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் அதுகுறித்து ஆலோசிக்க முதல்-அமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைசெயலகத்தில் தொடங்கியது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரை விடுதலை செய்வது பற்றி அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது.

7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரைப்பது குறித்து அமைச்சரவையில் ஆலோசனை நடத்தப்பட்டது. 7 பேர் விடுதலை பற்றி சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. முதல்-அமைச்சர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

இந்தநிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்பிரிவு 161-ன் கீழ் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.

சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டவும்,

அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு அமைச்சரவை பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு தமிழ்மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.

ஆளுநர் இப்போது என்ன முடிவு செய்யப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

Leave a Response