7 தமிழர் விடுதலை தமிழக அரசு முடிவு குறித்து பழ.நெடுமாறன் கருத்து

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்பிரிவு 161-ன் கீழ் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக,தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

தமிழக அமைச்சரவை 7 பேரையும் விடுதலை செய்யுமாறு ஆளுநருக்குப் பரிந்துரை செய்திருப்பதை மனமாற வரவேற்று நன்றி செலுத்துகிறேன். அமைச்சரவையின் பரிந்துரையை கால தாமதம் செய்யாமல் உடனடியாக ஏற்று அவர்களை விடுதலை செய்ய முன் வருமாறு ஆளுநரை வேண்டிக் கொள்கிறேன்.

வாழ்வின் வசந்த காலமான இளமைப் பருவத்தை 27 ஆண்டுகாலமாக சிறையில் தொலைத்துவிட்ட 7 பேர்களின் மறு வாழ்வுக்கு உதவ முன் வருமாறு தமிழக அரசை வேண்டிக் கொள்கிறேன்.

26 தமிழர் உயிர்க் காப்புக் குழுவில் அங்கம் வகித்து உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்தி 19 பேரை விடுதலை செய்வதற்கும் அதற்கு பிறகும் 7 பேர் விடுதலை வரை தொடர்ந்து ஒத்துழைத்த அமைப்புகள், மற்றும் தோழர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response