
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.
கடந்த மே மாதத்திலிருந்து இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் அது வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.81.92க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.74.77க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற்றைய விலையை விட 32 பைசாக்கள் உயர்ந்து ரூ. ரூ.82.24க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 42 பைசாக்கள் உயர்ந்து ரூ.75.19க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இப்படி நாள்தோறும் விலை உயர்ந்து கொண்டே செல்வதால், பெருமுதலாளிகளுக்கு சலுகைகள் சாமான்ய மக்களுக்கு இவ்வளவு சுமையா? என்று மோடி அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.


