கவர்ச்சி நடிகை குஷ்புவின் தொடரை வெளியிடுவதா? –நக்கீரன் ஏட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்பு.

நடிகை குஷ்பு தமிழ்க்கலாச்சாரத்துக்கு எதிராகப் பேசியதால் கடும் சர்ச்சைகள் எழுந்தன. குஷ்பு தொடர்ந்து அவ்வாறு பேசிவருவதாக ஒருசில தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில் குஷ்புவின் தொடர் ஒன்றை வெளியிடவிருக்கிறது நக்கீரன் ஏடு.

ஏற்கெனவே குஷ்பு வீட்டை முற்றுகையிட்ட தமிழர்முன்னேற்றப்படை என்கிற அமைப்பு. நக்கீரன் ஏடு குஷ்பு தொடரை வெளியிடக்கூடாது என்று  கேட்டுக்கொண்டுள்ளது.  தொடரை வெளியிட்டால் நக்கீரன் அலுவலம் முன் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் சொல்லியிருக்கின்றனர். இது தொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஒரு கட்சியின் தலைவரின் அரசியல் அறிவை அங்கத்தின் ஆராய்ச்சியில் கண்டுப்பிடிக்க முடியாது,
அகத்தின் ஆராய்ச்சியால் தான் கண்டுப்பிடிக்க முடியும்.

இதை உணர்ந்து நக்கீரன் வார இதழ் செயல்பட வேண்டும்.

தமிழர் பண்பாட்டை சீர் அழிக்க வந்த கள்ளத்தோனி கவர்ச்சி நடிகை குஷ்பு!!!

தமிழரின் பண்பாடு,நாகரீகம்,கலாச்சாரம்,வாழ்வியல் நெறி ,இவற்றிக்கு எதிராக பேசியும் செயல்ப்பட்டு வருபவர் கவர்ச்சி நடிகை குஷ்பு

இவரை பற்றி நக்கீரன் வார இதழில் தொடர் கட்டுரையை எழுதி வெளியிடுவதின் மூலம் குஷ்புவின் செய்கையை நக்கீரன் வார இதழ் ஊக்கப்படுததுவது போல் உள்ளது.இது தமிழக தமிழர்களையும்,உலக தமிழர்களையும்,மிகவும் வேதனைப்படுத்தும் பெரும் செயலாகும்.

நக்கீரன் வார இதழ் குஷ்புவின் தொடர் கட்டுரையை வெளியிட்டால் நக்கீரன் பத்திகை அலுவலகம் எதிரில் எனது தலைமையில் தமிழர் முன்னேற்ற படையினர் சாகும் வரை உண்ணாவிரதத்தில் அமருவோம்.

தமிழினி,கி.வீரலட்சுமி
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
தமிழர் முன்னேற்ற படை

Leave a Response