தமிழக, கர்நாடக மக்கள் ரஜினியைக் கைவிட்டது இதனால்தான்

காலா பட விவகாரத்தில் தமிழகம் கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் மிகுந்த கேட்ட பெயரைச் சம்பாதித்துவிட்டார் ரஜினி.

இப்போது நடக்கும் நிகழ்வுகளில் அது உறுதியாகியிருக்கிறது.

ரஜினி போன்ற ஒரு பெரிய நடிகரின் படம் புதுப்படங்களைப் போல டிஸ்ட்ரிபியூசன் அடிப்படையில் வியாபாரம் செய்யப்பட்டது. இதில் ரஜினி படம் மீது விநியோகஸ்தர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது தெளிவானது.

சென்னையின் முக்கிய திரையரங்குகளில் ஒன்றான கமலா திரையரங்கம், படக்குழுவினர் சொல்வது போல மக்களிடம் அதிகப்பணம் வசூலிக்க முடியாது என்று சொல்லி காலாவைத் திரையிடுவதைத் தவிர்த்ததில் திரையரங்குகளின் நிலை புரிந்தது.

படத்துக்கான முன்பதிவு தொடங்கி இரண்டு நாட்களாகியும் இரண்டு நாட்களுக்குக் கூட விற்கவில்லை என்பதில் மக்களின் மனநிலை தெரிகிறது.

தமிழகத்தில் அனைத்துத் தரப்பிடமும் ரஜினி மீது நம்பிக்கை இல்லை என்பதை இவை காட்டுகின்றன.

அதேபோல கர்நாடகத்தில் படத்தையே வெளியிட முடியாதநிலை, திரையுலகினர் மட்டுமின்றி கர்நாடக முதல்வரும் படத்தைத் திரையிடாமல் இருப்பது நல்லது என்று சொன்னார்.

இவற்றிற்கெல்லாம் காரணம், ரஜினி யாருக்கும் உண்மையாக இல்லாததுதான்.

கர்நாடகா போனால் இது என் தாய்வீடு என்பார், தமிழகத்தில் பச்சைத்தமிழன் என்பார்.

இப்படியே மாற்றி மாற்றிப் பேசியதால் இன்று இரு மாநிலங்களுமே அவரைக் கைவிட்டுவிட்டன.

நம் கண் முன்னே ஒரு உச்சநட்சத்திரம் உதிரும் நட்சத்திரமாகியிருக்கிறது.

Leave a Response